ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 6-வது தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அந்த அணியின் ‘இம்பாக்ட் பிளேயர்’ (Impact Player) முடிவு இப்போது பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூரை ‘இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்’ ஆக மும்பை அணி களமிறக்கியது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அவர் பேட்டிங்கும் செய்யவில்லை, ஒரு ஓவர் கூட பந்துவீசவும் இல்லை.

244 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே துவம்சம் செய்தபோதும், ஷர்துல் தாகூருக்கு பந்துவீச ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை.

இதைப் பார்த்த முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக், ஆகாஷ் சோப்ரா மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் மும்பை அணியின் கேப்டன் மற்றும் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“ஒருவேளை ஷர்துல் தாகூரை உள்ளே கொண்டு வந்ததையே அவர்கள் மறந்துவிட்டார்களோ என்னவோ? எந்த இம்பாக்ட்டும் செய்யாத இம்பாக்ட் பிளேயர் இவர் ஒருவராகத்தான் இருப்பார்” என கிண்டலடித்துள்ளனர்.

மும்பை அணியின் இந்தத் தொடர் சொதப்பல்கள் அந்த அணியின் பிளே-ஆஃப் கனவுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.