பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியிடம் தோல்வியடைந்து முல்தான் சுல்தான்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறியது. இப்போட்டியில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அதிருப்தியில், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் தனது பேட்டை அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமது அலி வீசிய ஒரே ஓவரில் ஒருமுறை கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய ஸ்மித், அடுத்த இரண்டு பந்துகளில் மீண்டும் அதே பீல்டரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். தனது முதல் பிஎஸ்எல் சீசனில் 380 ரன்கள் குவித்திருந்தாலும், வாழ்வா சாவா போட்டியில் சொதப்பிய கோபத்தை ஸ்மித் இப்படி வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஹைதராபாத் அணி 160 ரன்கள் என்ற இலக்கை உஸ்மான் கான் மற்றும் மாஸ் சதகத் ஆகியோரின் அதிரடி அரைசதங்களால் 15.2 ஓவர்களிலேயே எட்டி அசத்தல் வெற்றி பெற்றது.