உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் நடந்த ஒரு திருமண விழாவில், பிரியாணியில் ‘லெக் பீஸ்’ இல்லை என்ற விசித்திரமான காரணத்திற்காக மணமகன் வீட்டார் போர்க்களமாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண விருந்தில் பிரியாணி பரிமாறப்பட்ட போது, அதில் லெக் பீஸ் இல்லை என்பதைக் கண்டு ஆத்திரமடைந்த மணமகன் தரப்பு விருந்தினர்கள், மணமகள் வீட்டாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற, ஆத்திரமடைந்த கும்பல் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து மணமகள் வீட்டார் மீது வீசித் தாக்கியது. கல்யாண மண்டபமே போர்க்களம் போல காட்சியளிக்க, விருந்தினர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

“>

பிரியாணி லெக் பீஸுக்காகத் திருமண வீடே ரணகளமான இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ஒரு லெக் பீஸுக்காக இப்படியா?” என நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.