சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னணி திரைப்பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிய நிலையில், டாப் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டும் ஏன் வாக்களிக்க வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியிருந்தது.

இந்நிலையில், ’29’ என்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இதற்குப் பின்னால் உள்ள உருக்கமான காரணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தனது வேலைகளை முடித்துவிட்டு, வாக்களிப்பதற்காகச் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காகச் சரியான நேரத்திற்கு விமான நிலையம் வந்துள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக விமான நிலையத்தின் கேட் மூடப்பட்டுவிட்டதால் அவரால் விமானத்தைப் பிடிக்க முடியாமல் போயுள்ளது. இதனால்தான் அவரால் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க முடியவில்லை என ஆர்.ஜே.பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், லோகேஷ் தற்போது தனது புதிய பட வேலைகளுக்காகத் தோற்றத்தை மாற்றியுள்ளதையும் கிண்டலாகக் குறிப்பிட்ட பாலாஜி, வாக்கு செலுத்த முடியாமல் போனது லோகேஷுக்குப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.