சமூக வலைதளங்களின் ஆதிக்கம் சிறுவர்களின் மனநிலையைப் பாதிப்பதாகக் கூறி, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நார்வே அரசும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குப் புதிய தடைச் சட்டத்தைக் கொண்டு வர நார்வே அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தடையின் கீழ் மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம்), டிக்டாக், ஸ்நாப்சாட் மற்றும் எக்ஸ் (X) போன்ற முன்னணி தளங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
”தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காகச் சிறுவர்களின் மூளையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என நார்வே பிரதமர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதித்துள்ள நிலையில், இப்போது நார்வேயும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
