2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் புதுப்புது கணிப்புகளால் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன் வெளியிட்டுள்ள கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணிப்பின்படி, தவெக இந்த தேர்தலில் சுமார் 15% வரை வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.
ஆனால், அந்த வாக்குகள் ஒரு தொகுதியில் கூட வெற்றியாக மாறுவது கடினம் என்றும், விஜய் ‘ஸீரோ’ சீட்களையே பெறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய்யின் வருகை என்பது ஒரு ‘ஸ்பாய்லர்’ போல அமைந்து, ஆளும் திமுகவிற்கு எதிராக விழ வேண்டிய வாக்குகளைப் பிரிக்கும் ஒரு காரணியாக மட்டுமே இருக்கும் என்பது சுமந்த் சி. ராமனின் கருத்தாக உள்ளது. இந்த அதிரடி கணிப்பு தற்போது அரசியல் வட்டாரத்திலும், இணையத்திலும் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
