மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளே வெற்றி பெறும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சியும், கேரளாவில் காங்கிரஸும் வெற்றி பெறும் என அவர் கணித்துள்ளார். இது கடவுளின் ஆசீர்வாதத்தால் நடக்கும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் குறித்தும் கவலை தெரிவித்த பரூக் அப்துல்லா, அங்கு அமைதி திரும்பாவிட்டால் உலகிற்குப் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தப் போரை நிறுத்த விரைவாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகவும், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தலையிட்டு அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை என்றும் அவர் தெரிவித்தார்.
