நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து விவகாரம் நீதிமன்றப் படிகளில் ஏறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது ஒரு புதிய புகைப்படம் இணையத்தையே அதிர வைத்துள்ளது.

தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்த பிறகு, பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி நெருக்கமாக இருப்பதாகப் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன.

இந்த சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுப்பார் என்று பார்த்தால், இப்போது தனது தோழி கெனிஷாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் ஜெயம் ரவி.

இருவரும் ஒன்றாக இருக்கும் இந்தப் புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே காட்டுத்தீயாகப் பரவி, சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

விவாகரத்து விவகாரம் ஒரு பக்கம் கொழுந்துவிட்டு எரியும் சூழலில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரவி – கெனிஷா ஜோடி திருப்பதியில் வலம் வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.