திருமண வைபவங்கள் நடைபெறும் இடங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டமாக இருக்கும்போது, அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரங்கேறும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ஒரு திருமண நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக அரங்கேறியுள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு வந்திருந்த ஒரு நபர், மிகவும் கண்ணியமான தோற்றத்தில் கோட் சூட் அணிந்து கொண்டு அங்கிருந்தவர்களுடன் சகஜமாகப் பழகியுள்ளார்.
<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”en” dir=”ltr”>Suit-Boot thief steals Rs 5 lakh at Noida wedding 😳 <a href=”https://t.co/XaGQAV1rZb”>pic.twitter.com/XaGQAV1rZb</a></p>— News Algebra (@NewsAlgebraIND) <a href=”https://twitter.com/NewsAlgebraIND/status/2046872531811127529?ref_src=twsrc%5Etfw”>April 22, 2026</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
யாரும் கவனிக்காத நேரத்தில், அங்கிருந்த ஒரு பணப்பையை (Bag) நைசாக எடுத்துக்கொண்டு அவர் அங்கிருந்து நழுவியுள்ளார். அந்தப் பையில் சுமார் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அந்த நபர் பணப்பையைத் திருடும் காட்சிகள் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ ஆதாரத்தை வைத்துப் பணத்தைத் திருடிச் சென்ற அந்த ‘கோட் சூட்’ நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
