அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பகோய்மா பகுதியில் நடந்த ஒரு கோரமான விமான விபத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிரவைத்துள்ளன. 70 வயதான அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர், பயிற்சிக்காக ஒரு சிறிய ரக விமானத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டியுள்ளார். விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த உயரழுத்த மின்சாரக் கம்பிகளில் மோதியது.
இதில் அந்த விமானம் தலைகீழாகக் கவிழ்ந்து, அருகில் இருந்த ஒரு கடையின் கார் நிறுத்துமிடத்தில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது.இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்ததில் விமானி பலத்த காயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
<a href="http://
Adventure sports in India are barely regulated. If you can, avoid them. If you’re too adventurous to stay away, at least have the sense to verify every detail and the experience of the person you’re trusting with your life. She was lucky, most won’t be. pic.twitter.com/iVnv5Z0OKC
— Nikhil saini (@iNikhilsaini) April 21, 2026
“>
விமானம் மின்கம்பத்தில் மோதியதால் அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. விமானம் மக்கள் நடமாட்டம் இல்லாத வாகன நிறுத்துமிடத்தில் விழுந்ததால், தரையில் இருந்தவர்களுக்குப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. வெறும் 12 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த விபத்தின் திகிலூட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
