உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள முக்தேஷ்வரா கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், சமையல் கலைஞர் ஒருவர் ரொட்டிகளைத் தயாரிக்கும் போது அவற்றின் மீது எச்சில் துப்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் தந்துரி அடுப்பில் ரொட்டிகளை வைப்பதற்கு முன்பு தன்னிச்சையாக எச்சில் துப்புவது வீடியோவில் தெளிவாகத் தெரிவதாகவும், அந்த ரொட்டிகளே விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அருவருப்பான செயலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவில் உள்ள நபர் யார் என்பதை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், குற்றம் உறுதியானால் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஆய்வாளர் முனிஷ் பிரதாப் சிங் உறுதி அளித்துள்ளார்.
तंदूर की रोटी पर आपत्तिजनक हरकत का वीडियो वायरल#Hapur #UttarPradesh #ViralVideo@hapurpolice @Uppolice @digrangemeerut pic.twitter.com/RF8fcqc0rL
— khabarwala24 (@khabarwala24) April 22, 2026
“>
ஏற்கனவே காஸியாபாத் போன்ற பகுதிகளில் இது போன்ற சுகாதாரமற்ற சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
