திரைத்துறையில் நடிகைகள் எதிர்கொள்ளும் கசப்பான உண்மைகள் குறித்து நடிகர் ஜேடி சக்கரவர்த்தி சமீபத்தில் மனம் திறந்துள்ளார். ஒருமுறை பிரபல நடிகை ஒருவரின் பார்ட்டிக்குச் சென்றிருந்த போது, அங்கு எதிர்பாராத விதமாக ஒரு பெரிய தயாரிப்பாளர் வந்ததால், தங்களை நடிகை கட்டிலுக்கு அடியில் ஒளியச் சொன்னதாக அவர் கூறியுள்ளார்.

அந்தத் தயாரிப்பாளர் அந்த நடிகையிடம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் பேசிவிட்டுச் சென்றதைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் அந்த நடிகை இது குறித்து வருத்தப்படாமல், “வாய்ப்புகள் தேவைப்படுவதால் இதெல்லாம் தங்களுக்குப் பழகிப்போய்விட்டது” என விரக்தியாகக் கூறியது தமக்கு மிகுந்த வேதனையை அளித்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.