சமூக வலைதளங்களில் எப்போதுமே வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோக்களுக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக திருமணத்தன்று மாப்பிள்ளைகள் பட்டு வேட்டி, சட்டையோடு ராஜகுமாரன் போல வலம் வருவார்கள். ஆனால், இந்த வைரல் வீடியோவில் ஒரு மாப்பிள்ளை, பளபளப்பான ஷெர்வானி (Sherwani) உடையில், தலையில் திருமணப் பாகையோடு நடுரோட்டில் அமர்ந்து ஒரு வாகனத்தின் டயருக்கு பஞ்சர் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.

திருமண ஊர்வலம் சென்றுகொண்டிருந்த போது அந்த வாகனம் பஞ்சர் ஆனதா அல்லது அது அவருடைய தொழிலா என்பது தெரியவில்லை. ஆனால், முகூர்த்த நேரம் நெருங்கும் வேளையிலும், தன் கையில் அழுக்கு படுவதைப் பற்றிக் கவலைப்படாமல் முழு ஈடுபாட்டுடன் அவர் வேலை செய்த விதம் அங்கிருந்த உறவினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “கல்யாணம் நடந்துகொண்டே இருக்கும்,

ஆனால் செய்யும் தொழில்தான் சோறு போடும் என நிரூபித்துவிட்டார்” என்றும், “இவ்வளவு கடின உழைப்பாளி கணவராகக் கிடைக்க அந்தப் பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றும் தங்களது பாணியில் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். இந்த “பஞ்சர் மாப்பிள்ளை” வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம வைரல்!