வில்லிவாக்கம் தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அண்ணாமலை, தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை மிகக் கடுமையாகச் சாடினார். விடியற்காலை முதல் இரவு வரை பொய்யைப் பேசுவதையே அவர் முழுநேரத் தொழிலாக வைத்திருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மக்களைத் திசைதிருப்பும் இத்தகைய போலி அரசியல்வாதிகளைத் தொகுதியில் இருந்து அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று அவர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆதவ் அர்ஜுனாவின் பொய் மூட்டைகளுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், வில்லிவாக்கத்தில் தாமரை மலர்வது உறுதி என்றும் அண்ணாமலை ஆவேசமாக முழங்கினார்.
