சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் களத்தில் பாஜாக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மேடையில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாகச் சாடினார். காலையிலிருந்து இரவு வரை பொய் பேசுவதையே தனது முழுநேர வேலையாக வைத்திருப்பவர் ஆதவ் அர்ஜுனா என்றும், இப்படிப்பட்ட ஒருவரை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் ஆவேசமாகத் தெரிவித்தார். தேர்தலை முன்னிட்டு அண்ணாமலையின் இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.