சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவைப் பார்த்து சிரிப்பதா அல்லது “இப்படியும் இருப்பார்களா?” என வியப்பதா? என்று தெரியவில்லை. திருட வந்த இடத்தில் திருடர்கள் செய்த ஒரு சிறு தவறு, அவர்களைத் தலைதெறிக்க ஓட வைத்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், சில திருடர்கள் முகமூடி அணிந்து ஒரு வீட்டின் வாசலில் பதுங்கி நிற்கின்றனர். வீட்டின் உள்ளே புகுந்து பெரிய ஸ்கெட்ச் போடலாம் என நினைத்த அவர்களுக்கு விதி டோர் பெல் வடிவில் விளையாடியது. இருட்டைப் பயன்படுத்துவதற்காக மின்சாரத்தை அணைக்க முயன்ற திருடன், பதற்றத்தில் டோர் பெல்லை அழுத்திவிட்டார்.
View this post on Instagram
நிசப்தமான அந்த நள்ளிரவில் “டிங் டாங்” என்ற சத்தம் கேட்டதும், திருடர்களின் நெஞ்சுக்கூடு துடிக்கத் தொடங்கிவிட்டது. யாராவது விழித்துக்கொண்டு வெளியே வந்துவிடுவார்களோ என்ற பயத்தில், வந்த வழியே மின்னல் வேகத்தில் ஓடித் தப்பினர்.
திருடப்போன இடத்தில் தாங்களே பெல் அடித்துவிட்டு ஓடிய இந்தத் திருடர்களின் ‘அப்பாவித்தனத்தைப்’ பார்த்து நெட்டிசன்கள், “திருடர்களுக்கும் இனி டிரைனிங் தேவை போல” என கிண்டலடித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் என்ற பக்கத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்து வருகிறது.
