இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாகல் தன் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஓடிடி (OTT) திரை உலகில் பிரபலமான நடிகை அனியா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்றில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாகல், இன்ஸ்டாகிராமில் தனக்கு ‘கியூட்’ (Cute) என மெசேஜ் அனுப்பியதாக அனியா சாட்டர்ஜி ஆதாரங்களை வெளியிட்டார். இது கிரிக்கெட் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனியா சாட்டர்ஜி கூறியதாவது, இந்த விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தற்போது மக்கள் என்னையே அதிகம் கிண்டல் செய்கிறார்கள். நான் தான் அவமானப்படுகிறேன், அவருக்கு எதுவுமே ஆகவில்லை என்றார். தற்போது அவர் என் மீது அவதூறு வழக்கு (Defamation Case) தொடர்ந்துள்ளார்.
மேலும், சாகல் அனுப்பிய மெசேஜை தான் சாதாரணமாகவே கருதியதாகவும், பலரும் தன்னை ‘கியூட்’ என்று அழைப்பது வழக்கம் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், அந்த வீடியோவை நீக்குமாறு சாகலின் மக்கள் தொடர்பு (PR) குழு தன்னை அணுகியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
📢 Taniyaa Chatterjee Back with a massive claim on Yuzi Chahal:
Yuzvendra Chahal has sent me a defamation notice via email. I have hired a lawyer, and they advised me not to disclose the amount involved in the case. I haven’t done anything wrong. He messaged me cute, yet people… pic.twitter.com/3tU9RrtKK1
— TEJASH (@Tejashyyyyy) April 17, 2026
யுஸ்வேந்திர சாகல் சர்ச்சைகளில் சிக்கி வருவது இது முதல் முறையல்ல. தனது மனைவி தனஸ்ரீ வர்மாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, சாகலின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. முன்னதாக ஆர்ஜே மஹ்வாஷ் மற்றும் ஷெபாலி பக்கா ஆகியோருடன் இணைத்து அவர் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாகல், இந்த விவகாரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
