அமெரிக்கக் கடற்படையின் தொடர் துறைமுக முற்றுகைக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) மீண்டும் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கைகளைக் கைவிடும் வரை, இந்த நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படாது என்றும், இது மூடப்பட்டிருக்கும் என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

​உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும்பகுதி இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், ஈரானின் இந்த அதிரடி முடிவு உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அஞ்சப்போவதில்லை என ஈரான் ராணுவம் காட்டியுள்ள இந்த வீரம், மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. ஈரானின் இந்த நகர்வால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.