மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில் அரங்கேறியுள்ள ஒரு அமானுஷ்ய பூஜை விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ளது. ஆமை கடத்தல் வழக்கில் பிடிபட்ட 6 பேரின் செல்போன்களை ஆய்வு செய்த வனத்துறையினர், அதில் இருந்த வீடியோக்களைப் பார்த்து நிலைகுலைந்து போயுள்ளனர்.
நள்ளிரவில் சுடுகாட்டில் அமர்ந்து ஆமை மற்றும் ஆந்தைகளை வைத்து அமானுஷ்ய பூஜைகள் செய்த வீடியோக்கள் அதில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சியின் உச்சமாக, புதையல் எடுப்பதற்காகக் கன்னிப் பெண்கள் மற்றும் விதவை பெண்களைப் பயன்படுத்தியதும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளைப் புகைப்படம் எடுத்து மாந்திரீகர்களுடன் பகிர்ந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாந்திரீகர்களை ‘டெஸ்டர்’ (Tester) என்ற ரகசிய குறியீட்டுடன் அழைத்து வந்த இந்தக் கும்பல், சுமார் 50 இடைத்தரகர்களை வைத்துப் பெண்களைத் தேடிப் பிடித்து வந்துள்ளனர்.
தங்க பிஸ்கட் தருவதாக ஏமாற்றிப் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது 6 பேர் கைதாகியுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய மாந்திரீகர்களைப் பிடிக்க போலீசார் வலைவீசி வருகின்றனர். மகாராஷ்டிராவில் தொடரும் இது போன்ற மூடநம்பிக்கை கொடூரங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
