தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை இன்று (16.04.2026 ) மாலை 3 மணிக்கு வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்வில், அக்கட்சியின் 800 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு, QR கோடு அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும்; கர்ப்பிணிகள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தவெக தலைமை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விஜய்யின் இந்தத் தேர்தல் அறிக்கையில் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் என்னென்ன அதிரடி வாக்குறுதிகள் இடம்பெறப் போகின்றன என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
