தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். இதனால், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தான் அவரது கடைசிப் படம் என்று கூறப்பட்டது.
சுமார் 500 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தப் படம், தணிக்கை சிக்கல்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது இணையதளத்தில் கசிந்துள்ள சம்பவம் படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பாராத கசிவு காரணமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட, நடிகர் விஜய் அதே நிறுவனத்திற்காக மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக ‘ஜனநாயகன்’ அவரது கடைசிப் படமாக இருக்காது என்று தெரிகிறது. அவர் நடிப்பைக் கைவிடமாட்டார் என்று ஏற்கனவே எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்த நிலையில், இந்த புதிய தகவல் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
