கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது திமுகவுக்கு எதிரான அலை மிகத் தீவிரமாக வீசிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க திமுகவுக்குத் துப்பில்லை என விமர்சித்தார்.

அதற்குப் பதிலாக, 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்களைத் தருவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றி, அவர்களை முட்டாளாக்க திமுக முயற்சிப்பதாக அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ​மேலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி கும்பகோணத்தைத் தனி மாவட்டமாகப் பிரிக்காதது ஏன் என்றும் அவர் மேடையிலேயே கேள்வி எழுப்பினார்.

மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றாமல் காலங்கடத்தி வரும் திமுக அரசு, இப்போது பண பலத்தையும் கூப்பன் அரசியலையும் நம்பி களமிறங்கியுள்ளதாகச் சாடினார். “மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதை விட்டுவிட்டு, உண்மையான வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்” என எச்சரித்த அன்புமணியின் இந்தப் பேச்சு, டெல்டா மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.