உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக அதிவேகமாக பைக் ஓட்டிய 19 வயது இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். காசியாபாத்தின் பாசோண்டா பகுதியைச் சேர்ந்த இக்ரா என்ற அந்தப் பெண், தனது நண்பர் ஹாஷிம் என்பவருடன் ஐ.எம்.எஸ் கல்லூரி மேம்பாலம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஹாஷிம் பின்னால் அமர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்க, இக்ரா பைக்கை அதிவேகமாக ஓட்டியுள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் ஹெல்மெட் அணியாததால் இக்ராவின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
<a href=”http://
A tragic accident was reported in Ghaziabad, where a high-speed sports bike crashed into a divider, resulting in the death of a young woman, Ikra.
According to reports, Ikra was riding the bike while her friend, Hashim, was filming a video at the time of the crash. Neither of… pic.twitter.com/5qTUqBPygs
— Hate Detector 🔍 (@HateDetectors) April 13, 2026
“>
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வீடியோ எடுத்த ஹாஷிம் கால்கள் மற்றும் தோள்பட்டையில் காயங்களுடன் உயிர் தப்பினார்.
சமூக வலைதள வீடியோக்களுக்காக இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
