அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இரண்டாம் கட்ட நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் தற்போதைய தற்காலிக போர்நிறுத்தக் காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே மற்றொரு உயர்மட்டச் சந்திப்பை நடத்தி, ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்ட வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது. ஈரானும் இந்த ஒப்பந்தத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஜெனீவா அல்லது மீண்டும் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில், போர்நிறுத்தக் காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும், இது மேற்கு ஆசியாவில் அமைதி திரும்புவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.