அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில், இரண்டு வயது குழந்தை எரிக் ரைகார்ட் பட்டினியால் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளது. போதிய உணவும் தண்ணீரும் இல்லாமல் எலும்பும் தோலுமாக மாறிய அந்தப் பிஞ்சு குழந்தை, பசி தாங்க முடியாமல் தான் கட்டியிருந்த டைப்பர் துண்டுகளையும் சுவற்றின் சிமெண்ட் பகுதிகளையும் பிய்த்து தின்றுள்ளது. குழந்தையின் உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், பெற்றோர் அதைச் சரியாகக் கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

​காவல்துறையினர் நடத்திய சோதனையில், அந்தக் கொடுமைக்கார பெற்றோரின் அறை மட்டும் சுத்தமாக இருந்ததும், குழந்தை இருந்த இடம் முழுவதும் மலம் மற்றும் குப்பைகளுடன் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 14 மணிநேரம் கழித்தே குழந்தைப் பற்றி போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது அந்தக் குழந்தையின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர், மற்ற குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.