விஜய் நடிப்பில் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்துள்ள விவகாரம் திரையுலகையே அதிரவைத்துள்ள நிலையில், படக்குழுவினர் தற்போது மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

படத்தின் காட்சிகள் அல்லது முழுப் படத்தையும் எவரேனும் இணையத்தில் பதிவிறக்கம் (Download) செய்தாலோ அல்லது சமூக வலைதளங்களில் மற்றவர்களுக்குப் பகிர்ந்தாலோ (Share), சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபர் மீதும் தனித்தனியாகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் குறித்த சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மறுபுறம் மொத்தப் படமும் லீக் ஆகியிருப்பது தயாரிப்பு தரப்பிற்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதால், சைபர் கிரைம் உதவியுடன் லிங்குகளைப் பரப்புபவர்களைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.