உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள, பசுஞ்சாணத்தைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு சிலிண்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். தற்போது சந்தையில் உள்ள எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த பசுஞ்சாண சிலிண்டரின் விலை வெறும் 500 ரூபாய் மட்டுமே. 30 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டரில் 18 கிலோ எரிவாயு கிடைக்கிறது.

நமது நாட்டின் பாரம்பரிய அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த எரிவாயு, சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். இந்தக் கண்டுபிடிப்பு நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தால், எரிசக்தி துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது சாமானிய மக்களின் பணத்தைச் சேமிக்க உதவுவதுடன், பசுமை எரிசக்தி இலக்குகளை அடையவும் வழிவகுக்கும். மேலும், இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் விரிவுபடுத்தப்பட்டால், கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் வேலைவாய்ப்பும் பெருகும்.

 

 

View this post on Instagram

 

A post shared by @indiawire.in

“>இயற்கையைப் பாதுகாக்கும் அதே வேளையில், எளிய மக்களுக்கும் பயன் தரும் இத்தகைய முயற்சிகளுக்குப் பரவலான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.