ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் அர்ஜுன் டெண்டுல்கர், இன்னும் களம் இறங்காவிட்டாலும் தனது அபாரமான பந்துவீச்சால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், அவர் வலைப்பயிற்சியின் போது தொடர்ந்து ஏழு யார்க்கர் பந்துகளைத் துல்லியமாக வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ரிஷப் பந்த் மற்றும் அப்துல் சமத் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களே அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது, அவர் விரைவில் போட்டிகளில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏற்கனவே ஐந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஜுன், இந்த முறை லக்னோ அணிக்காகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கக் காத்திருக்கிறார்.
<a href=”http://

“>

முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த வைரல் வீடியோ அவரது வருகையை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. அதிவேகமான மற்றும் துல்லியமான யார்க்கர்களை அவர் வீசுவதைப் பார்த்த ரசிகர்கள், அர்ஜுன் டெண்டுல்கர் மீண்டும் ஐபிஎல் களத்தில் அனல் பறக்க விடுவார் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.