ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.195 கிரிக்கெட் டேட்டா பிளானில் அதிரடியான மாற்றத்தைச் செய்துள்ளது, இது வாடிக்கையாளர்களுக்குச் சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் விலை மாறவில்லை என்றாலும், அதன் வேலிடிட்டி காலம் 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, அதே விலையில் 60 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை ஜியோ குறைத்துள்ளது பயனர்களின் மாதாந்திரச் செலவை அதிகரிக்கும் ஒரு மறைமுக விலையேற்றமாகப் பார்க்கப்படுகிறது.இந்தத் திட்டத்தில் டேட்டா சலுகையில் எந்த மாற்றமும் இல்லை; பயனர்களுக்குத் தொடர்ந்து 15GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.
இதில் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் வசதிகள் கிடையாது என்றாலும், ஒரு கூடுதல் பலனாக 90 நாட்களுக்கு JioHotstar மொபைல் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் திரைப்படங்களை ரசிக்க முடியும். விலை மாறாமல் வேலிடிட்டி மட்டும் குறைந்திருப்பது ஜியோ பயனர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
