இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குநராகவும், பாலிவுட் வரை சென்று பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. எப்போதும் பரபரப்பாக இயங்கும் சினிமா உலகிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு, தற்போது அவர் தனது சொந்த கிராமத்தில் மிகவும் அமைதியான மற்றும் எளிமையான வாழ்க்கையைக் கழித்து வருகிறார்.
இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு சிறிய கிராமத்து வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு, கையில் இளநீர் வழுக்கையை வழித்து மிகவும் ரசித்துச் சாப்பிடுகிறார். மேலும், அந்த வீட்டின் திண்ணையில் வெறும் தரையிலேயே படுத்து உறங்குவதும், மின்விசிறி அல்லது ஏசி வசதி எதுவுமின்றி இயற்கைக் காற்றை அனுபவித்து அவர் ஓய்வெடுப்பதும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் திரையுலகில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் ஒரு கலைஞர், இவ்வளவு எளிமையாகத் தனது நேரத்தைச் செலவிடுவது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. “வில்லேஜ் லைஃப்” (Village Life) என்று அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
