சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஒரு முதியவர் தனது தோட்டத்தில் ரத்தாலு (Yam) எனும் கருணைக்கிழங்கு வகையைத் தோண்டியபோது, மண்ணுக்குள் இருந்து மனித கை போன்ற ஒன்று வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். முதலில் யாரோ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக நினைத்து பயந்த அவர், பின்னர் அதைச் சுத்தம் செய்து பார்த்தபோது அது மனித கை வடிவிலேயே வளர்ந்த ஒரு கிழங்கு என்பது தெரியவந்தது.

​ஐந்து விரல்கள் மற்றும் நகங்கள் என அச்சு அசலாக மனித கை போலவே இருந்த இந்த விசித்திரக் கிழங்கைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக வலைதளங்களில் இது வைரலானதைத் தொடர்ந்து, ஒருவர் அந்த ஒரு கிழங்கிற்காக சுமார் 1.25 லட்சம் ரூபாய் (8,000 யுவான்) தருவதாகக் கூறியுள்ளார்.

ஆனால், அந்த விவசாயியோ, “இது இயற்கையின் அபூர்வப் பரிசு, இதை நான் விற்க மாட்டேன்” எனக் கூறி அந்தப் பெருந்தொகையை மறுத்துவிட்டார். தற்போது இந்த ‘கை’ கிழங்கு ஒரு கல் பாத்திரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.