வேலூர் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக வலம் வந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ப.சண்முகத்தின் மகன் ப.ச.சுரேஷ், தற்போது திமுகவிலிருந்து அதிரடியாக விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

மாதுனூர் ஒன்றிய சேர்மனாக இருக்கும் இவர், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஏற்பாட்டின்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

சுரேஷை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற இபிஎஸ், வேலூர் மாவட்ட தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபடுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் திமுகவின் ஒரு முக்கிய வாரிசு புள்ளி அதிமுக பக்கம் சாய்ந்திருப்பது வேலூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.