நடிகை திரிஷா தனது செல்ல நாய் ‘இஸ்ஸி’யை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தனது நாய்களை குடும்ப உறுப்பினராகவும், பிள்ளையாகவும் கருதும் திரிஷா, இஸ்ஸியை கோவிலுக்கு அழைத்துச் சென்றதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாகப் பகிர்ந்திருந்தார்.

இதைப் பார்த்த ஒரு தரப்பு ரசிகர்கள் “ரொம்ப க்யூட்” என்று பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் “புனிதமான கோவிலுக்குள் நாயை அழைத்துச் செல்வது முறையா?” என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் இணைந்து பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திரிஷாவின் பெயர் அடிபட்டு வரும் நிலையில், இந்த கோவில் விவகாரம் அவருக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.