சாதாரணமாக ஒரு பூனை தன் குட்டிகளைத் தொடவே யாரையும் அனுமதிக்காது, அப்படி இருக்கையில் ஒரு கொடூரமான புலி தன் குட்டிகளை ஒரு மனிதன் தூக்க அனுமதிக்குமா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கும் இந்தச் சம்பவம் நிஜமாகவே நடந்துள்ளது.

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மட்டற்ற மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில், ஒரு நபர் கையில் கம்புடன் புலி இருக்கும் கூண்டுக்கு அருகே செல்கிறார்.

அங்கிருக்கும் புலிக்குட்டிகளை அவர் எந்த பயமும் இன்றி கையில் தூக்குகிறார். இதைப் பார்த்து அந்தப் புலி உறுமவோ அல்லது தாக்கவோ செய்யாமல், ஒரு செல்லப் பிராணி போல அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.

அந்த நபர் குட்டிகளைத் தூக்கிக் கொண்டு முன்னே செல்ல, அந்தப் புலியும் அவர் பின்னாடியே பின்தொடர்ந்து செல்கிறது. இறுதியில் அந்தக் குட்டிகளை அவர் ஒரு பாதுகாப்பான கூண்டுக்குள் வைக்க, புலியும் எந்த எதிர்ப்பும் இன்றி உள்ளே செல்கிறது.

அந்த மனிதன் மீது அந்தப் புலி வைத்துள்ள அபாரமான நம்பிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோ, “விலங்குகளுக்கும் அன்பு புரியும்” என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.