டேராடூனில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் மணப்பெண் புகுந்த வீட்டிற்குப் புறப்படும் நிகழ்வு நிகழ்வின் போது, மணப்பெண்ணின் வளர்ப்பு நாய்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் பாசப் போராட்டம் நடத்திய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மணப்பெண் காரில் ஏற முயலும்போது, அவரது இரு செல்லப் பிராணிகளும் விடாப்பிடியாக அவரைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் வீட்டிற்குள்ளேயே இழுக்க முயற்சி செய்தன.

மேலும் பொதுவாக மணப்பெண் தன் குடும்பத்தினரை விட்டுப் பிரியும்போது ஏற்படும் சோகத்தை விட, இந்த வாயில்லா ஜீவன்களின் அளப்பரிய பாசம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tri Paw Squad (@tripawsquad)

“>

இதனால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த ஆயிரக்கணக்கானோர், “விலங்குகளின் அன்பு எதற்கும் ஈடாகாது” என்றும், “இதைப் பார்த்ததும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்றும் தங்களது உணர்ச்சிகளைப் பகிர்ந்து வருகின்றனர். மனிதர்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, தற்போது இணையவாசிகளைக் கவர்ந்து வருகிறது.