நடிகை பூனம் பாண்டே மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பின் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் வெளியிட்ட பதிவு, அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த காலங்களில், கருப்பை வாய்ப் புற்றுநோயால் தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான செய்தியைப் பரப்பி, பின்னர் அது விழிப்புணர்விற்காகச் செய்த விளம்பர யுக்தி என்று கூறி பூனம் பாண்டே பெரும் கண்டனத்திற்கு உள்ளானார். அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது “நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளது, இதுவும் ஒரு கவன ஈர்ப்பு முயற்சியோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. ஒரு தரப்பினர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தாலும், பெரும்பாலானோர் அவரது முந்தைய ‘மரண நாடகத்தை’ சுட்டிக்காட்டி இதுவும் ஒரு போலியான பதிவாக இருக்கலாம் என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் விளம்பரத்திற்காக எதையும் செய்யும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், பூனம் பாண்டேவின் இந்த புதிய சர்ச்சை திரைத்துறையிலும் சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான செய்தியா அல்லது மீண்டும் ஒரு விளம்பர உத்தியா என்பது வரும் நாட்களில் அவர் அளிக்கும் விளக்கத்தில்தான் தெரியவரும்.
