ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான ஆட்டங்களுக்கு இடையே, இளம் வீரர் சூரியவன்ஷி வெளிப்படுத்திய பண்பான செயல் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
போட்டியின் போது ஜெய்ஸ்வாலின் பேட் எதிர்பாராதவிதமாக சக வீரர் ஜெய்ஸ்வால் காலில் பட்டது. அடுத்த கணமே பதற்றமடைந்த சூரியவன்ஷி, உடனடியாக அவரிடம் ஓடிச் சென்று, பேட்டைத் தொட்டு வணங்கி தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.
Jaiswal’s bat accidentally hit Suryavanshi’s foot, and he immediately called him over and touched Bat in respect. Such maturity at such a young age is Reason behind his success ❤️ pic.twitter.com/RJrugyM9mN
— CricketElysium (@ElysiumCricket) March 31, 2026
“>
“கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு ஒழுக்கம்” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த சூரியவன்ஷியின் இந்த முதிர்ச்சியான செயல், அவர் ஏன் மிகச் சிறிய வயதிலேயே இவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்று வருகிறார் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
ஆக்ரோஷமான ஆட்டத்திற்குப் பெயர் பெற்ற ஐபிஎல் களத்தில், இதுபோன்ற பண்பான நடவடிக்கைகள் விளையாட்டு வீரர்களிடையே இருக்க வேண்டிய பரஸ்பர மரியாதையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
