உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள புகழ்பெற்ற கலகோட்டியா பல்கலைக்கழக வளாகத்தில், ஒரு மாணவருக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்களுக்குள், ஒரு மாணவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாகத் திடீரென மோதல் வெடித்தது. ஒரு மாணவியின் காதலன் மீது அவரது தோழியே ஆசைப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த அந்த மாணவி பொது இடமென்றும் பாராமல் தனது தோழியுடன் சண்டையிடத் தொடங்கினார்.
Kalesh b/w two besties at Galgotias University, Noida after one girl developed a crush on her bestie’s boyfriend.
pic.twitter.com/KBCxNtP1gs— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 28, 2026
ஆரம்பத்தில் வாய்த்தகராறாகத் தொடங்கிய இந்த மோதல், அடுத்த சில நிமிடங்களிலேயே ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு முற்றியது.
ஆவேசமடைந்த மாணவிகள் இருவரும் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டும், கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டும் மல்லுக்கட்டினர்.
அங்கிருந்த மற்ற மாணவர்கள் தடுத்தும் சண்டை ஓயவில்லை. இந்த ‘ஹை வோல்டேஜ்’ டிராமாவை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “கல்லூரிக்கு படிக்க வர்றாங்களா இல்ல சண்டை போட வர்றாங்களா?” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்து கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
