டெல்லியில் உபெர் கால் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு, அந்த காரின் டிரைவர் கொடுத்த வாக்குமூலம் மரண பயத்தைக் காட்டியுள்ளது. காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த டிரைவர் தனது செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டே, “நான் அவனை மண்வெட்டியால் வெட்டி அங்கேயே முடித்துவிட்டேன்” என்று மிகவும் சாதாரணமாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண், தனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, கார் ஓடிக்கொண்டிருக்கும் போதே எப்படியோ சாதுர்யமாகக் கீழே இறங்கித் தப்பித்து ஓடியுள்ளார்.
View this post on Instagram
பின்னர் இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதோடு, காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். நள்ளிரவில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கார் டிரைவர் உண்மையில் யாரைக் கொலை செய்தார் அல்லது யாரிடம் பேசினார் என்பது குறித்துப் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
