திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி, அண்மையில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்துப் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
அந்த வீடியோவில், “எதுவா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ள வச்சுக்கங்கப்பா” என அவர் பேசியது விஜய்யின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனமாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தனது புதிய படமான ‘கார்மேனி செல்வம்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்த சர்ச்சை குறித்து ஓப்பனாகப் பேசியுள்ளார்.
“அந்த வீடியோ எடுக்கப்படுவது எனக்குத் தெரியும், தெரிந்துதான் பேசினேன்” என்று கூறியுள்ள சமுத்திரகனி, தனக்கு உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசத் தெரியாது என்றும், அக்கறையோடுதான் அந்த விஷயத்தைக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் ஒரு பகுதி மட்டுமே பகிரப்பட்டுள்ளதாகவும், அதற்காகத் தான் வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். “மனதில் பட்டதை அப்படியே பேசுவது என் வழக்கம், அதைச் சொல்லிவிட்டு நான் அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவேன்” என அவர் அளித்துள்ள இந்த விளக்கம், தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது.
