சமூக வலைதளங்களில் தற்போது ஒரு முரட்டு எருதின் ஆக்ரோஷமான வீடியோ இணையத்தையே அதிரவைத்து வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ராட்சத எருது சாலையின் நடுவே மிகவும் கோபத்துடன் நின்று கொண்டிருக்கிறது.
அப்போது அந்த வழியாக ஒரு டிராக்டர் கடந்து செல்ல முயல, அதைப் பார்த்ததும் அந்த எருதுக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட்டது. டிரைவர் சுதாரிப்பதற்குள், தனது பலமான கொம்புகளால் டிராக்டரின் முன்பகுதியை முட்டித் தள்ளியது. அந்த எருதின் வேகம் எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்றால், கனரக டிராக்டரையே ஒரு சிறு விளையாடி பொம்மையைப் போல காற்றில் அப்படியே தூக்கி வீசியது.
இதைப் பார்த்ததும் டிரைவர் அலறியடித்துக் கொண்டு கீழே குதித்து ஓடித் தப்பித்தார். டிரைவர் போன பிறகும் அந்த எருதின் கோபம் குறையவில்லை, தொடர்ந்து அந்த டிராக்டரை முட்டிச் சேதப்படுத்தியது.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த எருதின் அசாத்திய வலிமையைப் பார்த்த நெட்டிசன்கள், இது ‘நிஜ உலக பாகுபலி மாடு’ என்றும் ‘தேசி ஹல்க்’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
