தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் நடிகர் விஜய் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

மேலும் “விஜய் இப்போதுதான் அரசியலில் ஆரம்பப்பள்ளி படித்துக் கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டார். அரசியலில் இது அவருக்கு முதல் தேர்தல் என்பதால், தேர்தல் களம் என்றால் என்ன என்பதை அவர் தற்போதுதான் கற்றுக்கொண்டிருப்பதாக ரவீந்திரநாத் விமர்சித்துள்ளார். இருப்பினும், இந்தத் தேர்தலில் உண்மையான ‘ஹீரோ’ யார் என்பதை மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

இது குறிப்பாக, களத்தில் நின்று போராடுபவர்களுக்கே மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஓ.பி.எஸ் அவர்களை மக்கள் உண்மையான ஹீரோவாக நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.  விஜய்யின் அரசியல் வருகையை ஒரு தொடக்க நிலையாக மட்டுமே பார்ப்பதாக ரவீந்திரநாத் கூறியுள்ள இந்த கருத்து, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.