மென்பொருள் பொறியாளர்களையும், கார்ப்பரேட் ஊழியர்களையும் மிஞ்சும் வகையில், தெருவோர பானி பூரி விற்பனையாளர் ஒருவர் மாதம் ரூ. 90,000 சம்பாதிப்பதாக வெளியாகியுள்ள தகவல் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் படைப்பாளியான காசி பெரேரா என்பவர், ஒரு நாள் முழுவதும் அந்தப் பானி பூரி கடையில் உதவியாளராகப் பணியாற்றி இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார். வெங்காயம் நறுக்குவது, உருளைக்கிழங்கு மசிப்பது முதல் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவது வரை அனைத்து வேலைகளிலும்

 

View this post on Instagram

 

A post shared by Cassy Pereira (@cassiusclydepereira)

அவர் ஈடுபட்டார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், அந்தக் கடையில் ஒரு மணி நேரத்திற்குள் 120-க்கும் மேற்பட்ட பூரிகள் விற்பனையாவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும் இந்தக் கடையில், ஒரு தட்டு பானி பூரி 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காசி பெரேராவின் ஆய்வின்படி அந்த வியாபாரியின் வருமான விவரம் பின்வருமாறு,

தினசரி விற்பனை: 80 முதல் 100 தட்டுகள், தினசரி வருமானம்: சுமார் ரூ. 3,000., மாதாந்திர வருமானம்: சுமார் ரூ. 90,000, ஆண்டு வருமானம்: சுமார் ரூ. 10.8 லட்சம்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “எனது ஆண்டுச் சம்பளத்தை (CTC) விட இவரது வருமானம் அதிகமாக இருக்கிறது” என ஒருவர் பதிவிட்டுள்ளார். “பி.காம் (B.Com) முடித்தவர்களுக்கும் இவருக்கும் ஏதோ தனிப்பட்ட பகை இருக்கும் போல” என்று மற்றொருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். அதேசமயம், இவ்வளவு லாபம் ஈட்ட முடியுமா என்று ஒரு தரப்பினர் சந்தேகமும் எழுப்பியுள்ளனர்.

இதேபோன்ற ஒரு சம்பவத்தில், கடந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பானி பூரி விற்பனையாளர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் சோதனையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 2023-24 நிதியாண்டில் ஆன்லைன் மூலமாக மட்டுமே சுமார் 40 லட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம் பெற்றதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும்  ஆண்டு வருமானம் 40 லட்சம் ரூபாயைத் தாண்டும் வணிகங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் பதிவு செய்வது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.