ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து ரசிகர்களிடையே எப்போதும் விவாதங்கள் நடப்பதுண்டு. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இது குறித்த தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். கிறிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடியிருந்தாலும், விராட் கோலிதான் ஐபிஎல் வரலாற்றின் சிறந்த பேட்ஸ்மேன் என்று அவர் பாராட்டியுள்ளார்.

தற்போது 8,661 ரன்களுடன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார், அவருக்கு அடுத்ததாக ரோகித் சர்மா 7,046 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.அதேபோல், ஐபிஎல் வரலாற்றின் சிறந்த பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ராவை மைக்கேல் வாகன் தேர்வு செய்துள்ளார். மலிங்கா மற்றும் ரஷித் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், தான் பார்த்தவரை பும்ராவே மிகச்சிறந்தவர் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பேட்டிங்கில் கோலியும், பந்துவீச்சில் பும்ராவும் தங்களது அபாரமான திறமையால் ஐபிஎல் அரங்கில் தனித்து விளங்குவதாக வாகன் சுட்டிக்காட்டியுள்ளார்.