நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழக அரசியல் களம் குறித்து மிகத் துணிச்சலான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். “பாஜக-வின் தற்போதைய ஒரே இலக்கு அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளைத் தமிழக அரசியலில் இருந்து முழுமையாகக் காலி செய்வதுதான்” என்று அவர் வெடிகுண்டை வீசினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எந்தக் கூட்டணியில் இணைந்தாலும் அல்லது எதிர்க்கட்சிகள் எத்தனை மெகா கூட்டணிகளை அமைத்தாலும், பலமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை யாராலும் அசைக்கவோ, நெருங்கவோ முடியாது என்று அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி, மீண்டும் ‘ஸ்டாலின் 2.0’ ஆட்சி அமைவது உறுதி என மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
