தமிழக அரசியலில் “தவெக” யாருடைய டீம் என்கிற விவாதம் நீண்ட நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சபாநாயகர் அப்பாவு இன்று ஒரு அதிரடிப் புகாரை முன்வைத்துள்ளார். “அமித்ஷா சொல்லி கேட்டுத்தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்” என்று கூறியுள்ள அவர், அதற்கான காரணங்களையும் அடுக்கிக் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவும், விஜய்யின் வலது கரமான புஸ்ஸி ஆனந்தும் நெருங்கிய நண்பர்கள் என்றும், தவெக-வின் முக்கியப் புள்ளிகளான அருண்ராஜ் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

​அதுமட்டுமின்றி, அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவாகாமல் இருப்பதற்கு காரணமே, பின்னணியில் விஜய்யுடன் நடக்கும் பேரம் தான் என்றும் அப்பாவு போட்டு உடைத்துள்ளார். “விஜய்யை மிரட்டிப் பணிய வைத்து தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த பாஜக ஸ்கெட்ச் போட்டுள்ளது” என்கிற அவரது பேச்சு, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.