இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு கேரளாவில் ஏப்ரல் 9-ம் தேதியும், அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதியும், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

மொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மார்ச் 30ம் தேதி முதல் வேட்பமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கள் ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடையும் நிலையில் இதன் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 9-ம் தேதி ஆகும். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.