மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், திருமணமான பெண் ஒருவர் மீது கொண்ட ஒருதலைக் காதலால், அவரது உள்ளாடைகளைத் திருடி வந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த வாலிபரின் வினோதமான செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது உஜ்ஜைனியின் டாஞ்சா பவன் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், கடந்த சில நாட்களாக வினோதமான புகாரை எதிர்கொண்டனர். அவர்கள் வீட்டின் வெளியே காயப்போடும் துணிகளில், குறிப்பாக அந்த வீட்டுப் பெண்ணின் உள்ளாடைகள் மட்டும் அடிக்கடி மாயமாகி வந்தன. ஆரம்பத்தில் இதைக் கண்டுகொள்ளாத குடும்பத்தினர், திருட்டுத் தொடர்ந்து நடைபெறவே அதிர்ச்சியடைந்தனர்.
யார் இந்தத் திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதைக் கண்டறிய, வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவன் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து, அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, மின்னல் வேகத்தில் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான அங்கித் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவனைத் தேடிச் சென்று அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அங்கித்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகின. அங்கித் அந்தப் பெண்ணின் மீது தீவிரமான ஒருதலைக் காதல் கொண்டிருப்பதும், தனது காதலை வெளிப்படுத்தும் விதமாகத் தனது நெஞ்சில் அந்தப் பெண்ணின் பெயரைப் பச்சை (Tattoo) குத்தியிருப்பதும் தெரியவந்தது.
“அந்தப் பெண்ணின் மீது எனக்கு அதீத மோகம் இருந்ததால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டேன்” என்று அவன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். மனநலம் பாதிக்கப்பட்டவனைப் போலச் செயல்பட்ட அந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவனைச் சிறையில் அடைத்தனர்.
மேலும் சமூகத்தில் இத்தகைய விபரீத எண்ணம் கொண்ட நபர்களால் பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
