உலகப் புகழ்பெற்ற டெக் ஜாம்பவான் எலான் மஸ்க், ‘சாட் ஜிபிடி’ (ChatGPT) குறித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவு இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “சாட் ஜிபிடி பாதுகாப்பானது அல்ல, அது பலரின் மரணத்தோடு தொடர்புடையது” என மஸ்க் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கனடாவில் ஒரு பள்ளி மாணவி 6 பேரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவர் பல நாட்களாக சாட் ஜிபிடி-யுடன் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு குறித்து விவாதித்தது தெரியவந்துள்ளது. இந்த உரையாடல்களை அறிந்தும் OpenAI நிறுவனம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

​ஏற்கனவே சாட் ஜிபிடி-யால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், “உங்கள் அன்புக்குரியவர்களை இதைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்” என மஸ்க் எச்சரித்துள்ளார். இது ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் OpenAI நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதால் AI உலகம் இப்போது நிலைகுலைந்து போயுள்ளது. வெறும் தகவல்களைத் தரும் கருவியாகப் பார்க்கப்பட்ட ஏஐ (AI), இப்போது உயிரைப் பறிக்கும் ஆயுதமாக மாறி வருகிறதா என்ற விவாதம் டெய்லி ஹன்ட் வாசகர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்?