தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பு மற்றும் அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மேலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணி, அந்நிய மண்ணில் காட்டிய மன உறுதியும், இக்கட்டான சூழலிலும் பதற்றமின்றி விளையாடிய விதமும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்குப் பெரும் நம்பிக்கையை அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்துப் பேசிய கம்பீர், அவர் களத்தில் வீரர்களைக் கையாளும் விதம் மற்றும் இக்கட்டான நேரங்களில் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மாவின் அதிரடி சதங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த நிலையில், ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிதான் இந்தத் தொடரை வெல்ல உதவியது என்றும், இதே உத்வேகத்துடன் அடுத்தடுத்த தொடர்களிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்படும் என்றும் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.